உத்தர பிரதேச மாநிலம் சிகந்த்ராபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்ற இரண்டு பேர் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர். இதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து பங்க் மேலாளரிடம் கேட்டுள்ளனர். அவரும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரிக்க கோபம் அடைந்த இருவரும், பெட்ரோல் பங்க் மேலாளரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடனே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த பங்க் மேலாளரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் செய்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.