மம்மியை காதலியாக்கிய டெலிவரி பாய்! ஆப்பு வைத்த விநோத ஆசை

156
Advertisement

பெரு நாட்டை சேர்ந்த பெர்மஜோ என்ற நபர் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை வைத்திருப்பதற்காக கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்த பெரு போலீசார் விசித்திரமான விவரங்களை வெளிக்கொண்டு வந்தனர்.

அந்த மம்மி தனது காதலி எனக் கூறியுள்ள பெர்மஜோ அதை குளிர் தன்மை கொண்ட தெர்மல் பையில் வைத்து வந்துள்ளார்.

முன்னதாக உணவு டெலிவரி செய்பவராக பெர்மஜோ இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக மம்மியை தன் வீட்டில் வைத்திருக்கும் அவர், தனது நண்பர்களுக்கு காட்ட எடுத்து வந்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

மம்மிக்கு Juanita என பெர்மஜோ பெயரிட்டு அழைத்து வந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 500இல் இருந்து 600 வருடங்கள் பழமையான ஆண் உடலின் மம்மி என உறுதியாகியுள்ளது.

பெரு நாட்டின் கலாச்சார துறையிடம் மம்மி ஒப்படைக்கப்பட்ட பிறகு பெர்மஜோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15ஆம் நூற்றாண்டு முதலே தொல்பொருளாய்வு செய்ய சிறப்பான இடமாக பெரு பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.