ஒரே மேடையில் தான் காதலித்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் செயல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் என்ற மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தான் சந்து மயூர்யா.
இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தரி என்னும் 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் சந்து மயூர்யாவின் வாழ்வில் மற்றொரு பெண் வந்துள்ளார்.
சந்து மயூர்யா தனது உறவினர் இல்லத் திருமணத்தில் 20 வயதான ஹசீனா என்ற பெண்ணை கடந்த ஆண்டு சந்தித்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக தான் பழகினார் பிறகு இது காதலாக மாறியுள்ளது.
இருவரையும் காதலித்து வந்துள்ளார் சந்து.
இதில் மெயின் ட்விஸ்ட் பாயிண்ட் என்னவென்றால் சந்து இரு பெண்களை காதலிப்பது அந்த இரு பெண்களுக்குமே தெரியும்.
இது தான் இதில் ஒரு சுவாரசியமான விஷயம்.
அந்த இரு பெண்களும் வாழ்ந்த நங்கள் சந்து உடன்தான் வாழ்வோம் என்று சொல்ல சந்து மயூர்யா தனது இரு காதலிகளையும் கிராமத்தினர் முன்னிலையில் கோலாகலாமாக திருமணம் செய்துகொண்டார்.
திருமணதில் ஹசீனாவின் பெற்றோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், சுந்தரியின் பெற்றோருக்கு உடன் பாடில்லை எனவே அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த திருமணம் சட்டப்பூர்வமானது இல்லையென்றாலும், பழங்குடியின கலாசாரத்தின்படி இவர்களது திருமணம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை பார்த்த பலரும் இது ஒட்டுமொத்த கலாச்சாரத்தையே இழிவுபடுத்தும் செயல் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள்.