இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது கோடிக்கணக்காக வாடிக்கையாளர்களுக்கு 17000 ரூபாய் மதிப்பிலான சேவையை இலவசமாக கொடுக்க தயாராகியுள்ளது.
ஏர்டெல் இப்போது முதல் முறையாக AI சாட்பாட் சேவையில் கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு இலவச Perplexity Pro சந்தா வழங்கி வருகிறது. இது சுமார் ரூ.17,000 மதிப்புள்ள சேவையாகும்.
இந்த Perplexity Pro இலவச சந்தா வாயிலாக Airtel பயனர்கள் தங்கள் ஆய்வு, படிப்பு மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள AI தொழில்நுட்பங்களை இலவசமாக அனுபவிக்க முடியும்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Perplexity Pro பெறுவது எப்படி?
Airtel Thanks செயலியை திறக்கவும்.
‘Rewards’ பகுதியை சென்று, “Get 12 months of Perplexity Pro worth ₹17,000 FREE” என்ற பேன் மீது தட்டவும்.
‘Claim Now’ பொத்தானை அழுத்தவும்.
Perplexity இணையதளத்தில் புதிய கணக்கை உருவாக்கவோ அல்லது உள்நுழையவோ செய்யவும். எந்தவிதமான கட்டணத் தகவல் தேவையில்லை, சந்தா உடனடியாக செயல்படும்.
முக்கிய குறிப்பு : இந்த சலுகை ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கக்கூடும்.