Wednesday, July 2, 2025

பெண் பணியாளர்களுக்கு மிளகாய் ஸ்ப்ரே – இந்திய ரயில்வே முடிவு

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இந்திய ரயில்வே ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் பணியாளர்கள் சவாலான சூழ்நிலைகளை விரைவாக சமாளிக்க உதவு வகையில், அவர்களுக்கு மிளகாய் ஸ்ப்ரே கேன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாகவோ அல்லது குழந்தைகளுடன் பயணிக்கும் பெண் பயணிகளைப் பாதுகாக்கும்போது, அவர்களின் பாதுகாப்பான ரயில் பயணங்களை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மிளகாய் ஸ்ப்ரே கேன்களை வழங்குவதன் மூலம், பெண் RPF பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பைப் பெறுவார்கள். மேலும், அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், துன்புறுத்தல் சம்பவங்களை எளிதாகவும், அவசரநிலைகளை திறம்பட கையாளவும் உதவும் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news