Wednesday, February 5, 2025

சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்களை திருடி சென்ற நபர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் நேற்று நள்ளிரவில் சில மர்ம நபர்கள் மதுபான கடையின் சுவற்றை துளையிட்டு மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.

அப்போது மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் கடைக்கு சென்ற பொழுது அங்கு திருட்டு ஈடுபட்டிருந்த அவர்கள் போலீசார் கண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மதுபான கடையில் இரண்டாவது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news