சேலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை ஆபத்தான முறையில் மக்கள் கடந்து செல்கின்றனர். விரைவில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட தெற்குகாடு பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நதி கரை, கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், அப்பகுதியினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே நதிக்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதையும் இருந்த இடம் தெரியாமல் சேதமாகியுள்ளதால், விரைவில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.