விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் பெருங்களத்தூர், தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறை முடிந்து, இன்று மக்கள் சென்னை நோக்கி படையெடுத்தனர். மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட நகரங்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
ஜி.எஸ்.டி. சாலையில் நீண்ட தூரத்திற்கு வானங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், மக்கள் வெள்ளத்தால் தாம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்த நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.