தூத்துக்குடியில் மனுக்களை அளிக்க மக்கள் வராததால், ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
தற்போது சகஜ நிலை திரும்பிய நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மக்கள் ஆர்வமுடன் மனு அளிக்க வரவில்லை. இதனால் மக்கள்கூட்டமின்றி ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது.