Wednesday, December 24, 2025

செயினை பறிக்க முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்

திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் நேற்று இரவு மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு நபர் மூதாட்டி அணிந்திருந்த தங்க செயினை பறித்து அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்பொழுது மூதாட்டி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News