மத்திய அரசு, ஊழியர் ஓய்வூதியத் திட்டம் அதாவது EPS-95-ன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இனி ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,500 ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்பதே அது. இந்த புதிய குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை, தற்போது மிகக் குறைந்த ஓய்வூதியம் பெற்று வரும் நிறைய ஓய்வூதியதாரர்கள் நிம்மதியை தருவதாக இருக்கும். இந்த உயர்வு வரும் மே மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மாற்றத்தின் மூலம், EPS-95 திட்டத்தின் பயனாளிகள் அனைவரும் இனி மாதந்தோறும் குறைந்தது ரூ.7,500 ஓய்வூதியம் பெறுவார்கள் என்பது Good News தான். இதற்கு முன்பு, பலர் மாதத்திற்கு வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாகப் பெற்று வந்த நிலை கூடிய சீக்கிரம் மாறும்.
ஆனால் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த EPS-95 திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கே இந்த புதிய உயர்வு பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்காக ஓய்வூதியம் பெறுவோர் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO இந்த மாற்றத்தை தானாகவே செயல்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் மே 2025 முதல் இந்த குறைந்தபட்ச 7,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுவதோடு நிலுவையில் ஓய்வூதியத் தொகை இருந்தால், அதுவும் இந்த தேதியிலேயே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஓய்வூதியதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. EPFO தனது மண்டல அலுவலகங்களுக்கு இது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி, கணக்கீட்டு முறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வரும் நாட்களில் பணவீக்கத்தை மனதில் வைத்து இந்த ஓய்வூதியத்தில் கூடுதல் உயர்வு அதாவது அகவிலைப்படியும் அதாவது DA வழங்கப்படவும் வாய்ப்புள்ளதால் இது ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.