Thursday, May 15, 2025

19 நாட்களுக்கு பிறகு அமைதியான சூழல் – இந்திய ராணுவம் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7ம் தேதி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது.

இந்நிலையில் நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு எல்லையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை. அமைதியான சூழல் நிலவியது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Latest news