ஆந்திர மாநில துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் நடித்து இந்த வாரம் ஜுலை 24ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது ‘ஹரிஹர வீரமல்லு’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் இன்று காலை நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், “அரசியல் ரீதியாக நான் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கலாம். ஆனால், நடிகராக எனது பிரபலம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மற்ற நடிகர்களை விடவும் குறைவுதான். இந்தப் படம் பல சிக்கல்களை சந்தித்து வெளியாகிறது. எனது படங்களின் வியாபாரம் ஒப்பீட்டில் குறைவாகவே இருக்கும். அதனால்தான் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று யோசித்து இங்கு வந்துள்ளேன்.” என பேசியுள்ளார்.