தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் இன்று திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். . பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படும் கே.பாக்யராஜ் காலமாகி விட்டார் என்ற செய்தி தமிழ்த் திரையுலகில் பெரும் ஆட்கொள்ளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது முதல் திரைப்படமான சுவரில்லா சித்திரங்கள் தொடங்கி, முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு, அந்த 7 நாட்கள் என்ற காவியங்களை படைத்தவர்.
இன்றைய இளம் இயக்குநர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் திகழ்ந்தவர். இந்திய சினிமாத்துறையில் திரைக்கதை எழுதுவதில் முடிசூடா மன்னராக இருந்தவர். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். அதே சமயம் நாளை (28-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.என்று அதில் கூறப்பட்டுள்ளது.
