ஜப்பானை சேர்ந்த பேனசோனிக் (Panasonic) நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
தங்களுடைய நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்ய இருப்பதாக பேனசோனிக் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஜப்பானில் பணிபுரியும் ஊழியர்களில் ஐந்தாயிரம் பேரும் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களில் ஐந்தாயிரம் பேரும் வேலை இழக்க உள்ளனர்.
1918 ஆம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பேனசோனிக் . 2024ஆம் ஆண்டில் 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிறுவனமாக இது உள்ளது.