இனி பான் கார்டு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது., குழப்பத்தில் மக்கள்

இந்தியாவில் ஆதார் கார்டு வங்கி சேவைகள் முதல் அரசு சலுகைகள் வரை அத்தியாவசிய அடையாள அட்டையாக செயல்படுகிறது. ஆனால், ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்ள பான் கார்டு இப்போது சரியான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.

முந்தைய காலத்தில், ஆதார் திருத்தத்தில் பான் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டதால், அதில் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் இருந்தே இருந்தன.

UIDAI கூறியது பான் கார்டில் முகவரி ஆதாரங்களின் இல்லாத காரணத்தால், பெயர் திருத்தத்தில் பயன்படுத்துவதற்கான ஆவண பட்டியலில் பான் கார்டை நீக்கியுள்ளது. ஏனெனில் பான் கார்டு வரிவிதிப்புக்கு மட்டும் பயன்படுத்தப்படும் ஆவணமாகும்; ஒரு நபரின் அடையாளம் மற்றும் முகவரியை நிரூபிக்காது.

இதைத் தொடர்ந்து, ஆதார் திருத்தத்துக்கு சமர்ப்பிக்கக்கூடிய ஆவணங்களில் பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன்கார்டு, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், அரசாங்கம் வழங்கும் அடையாள அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவை அடங்கும்.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர் திருத்தத்தில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்தது அதை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டு இனி ஆதார் பெயர் திருத்த ஆவண பட்டியலில் இல்லாததால், பொதுமக்களுக்கு இதனால் குழப்பமும் உருவாகியுள்ளது.

Related News

Latest News