Friday, February 14, 2025

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 14 காளைகளை அடக்கிய வீரர் முதலிடம்

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில், 19 காளைகளை பிடித்து கார்த்தி என்பவர் முதல் இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில் 14 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2 வது இடத்தை பிடித்துள்ளார். பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபா என்ற வீரர் 11 காளைகளை அடக்கி 3 இடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Latest news