நடப்பு IPL தொடர் ஏறக்குறைய 70% சதவீத போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் ஓரிரண்டு போட்டிகளில் அணிகளின், Play Off வாய்ப்பு இறுதி செய்யப்பட்டு விடும். முதல் ஆளாக சென்னை சூப்பர் கிங்ஸ் Play Off ரேஸில் இருந்து வெளியேறி இருக்கிறது.
சென்னை பின்னாலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் சென்று விட்டன. நடப்பு சாம்பியன் கொல்கத்தாவின் Play Off கனவும் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், லக்னோ பஞ்சாப் ஆகிய 6 அணிகள் மட்டுமே, இன்னும் இந்த Play Off ரேஸில் நீடிக்கின்றன.
இன்னும் கோப்பை வெல்லாத பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் ஆட்டத்தில் நீடிப்பதால், இந்த வருடம் எந்த அணி IPL கோப்பையை தூக்கப் போகிறது? என்பதை இன்னும் கணிக்க முடியவில்லை. இந்தநிலையில் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான ஆகாஷ் சோப்ரா, IPL கோப்பை குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வலிமையாக திகழ்கிறது. என்றாலும் IPL கோப்பையை பெங்களூரு அணி தான் வெல்லும் என்று நான் கருதுகிறேன். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்து ஏரியாவிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்,” என்று பேசியுள்ளார்.
அதேநேரம் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ”இந்த வருடம் 6வது IPL கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெல்லும்,” என்று ஆரூடம் கூறியிருக்கிறார். மும்பை – பெங்களூரு இரண்டில் எந்த அணி IPL கோப்பையை வெல்லப் போகிறது? என்பதை, நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.