Thursday, May 8, 2025

பாகிஸ்தான் சுக்குநூறா போயிடும்! இந்தியா வச்சுருக்குற இந்த ஒன்னு போதும்!

பாகிஸ்தான் ஏற்படுத்திய தாக்குதல்களுக்கு பதிலாக இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலால்.. தற்போது நிலைமை மிகவும் மோசமாகிப் போயுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. இந்தியாவின் தாக்குதலை நேரடியான போர் நடவடிக்கையா கருதி, கடும் எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தானில் 5 முக்கிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் பின்னணியாக, இந்தியாவை நேரடியாக குறிவைத்து “எதிரியாகவே” பிரகடனம் செய்துள்ளார்.

இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகாரபூர்வ போர் வெடிக்கும் வாய்ப்பு நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் கையில் இருக்குற “பிரம்மோஸ்” என்ற ஏவுகணை தான், பாகிஸ்தானுக்கு ஒரு கனவிலும் நினைக்க முடியாத சவாலை உருவாக்கியிருக்குது.

பிரம்மோஸ் – இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய சூப்பர்சோனிக் ஏவுகணை. ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு வேகத்தில் செல்வதாலே, இதை கண்டுபிடிக்கவோ, இடைமறிக்கவோ பாகிஸ்தானால் முடியவே முடியாது. இதை  நிலம், வான், கடல் மூன்று தளங்களிலிருந்தும் ஏவப்பட முடியும். அதனால்தான் இது எங்கிருந்து வரும் என்பதையே கணிக்க முடியாத நிலை.

இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் தூரத்துக்கு இலக்குகளை அழிக்கக்கூடியது. அதுவும் 200–300 கிலோ ‘HEAVY  FOREHEAD’ இல், ஒரு தாக்குதலிலேயே எதிரியின் முக்கிய கட்டமைப்புகளை முற்றிலும் சிதைக்கும் சக்தி இதற்கு இருக்கிறது.

பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், இந்த வேகத்தையும், துல்லியத்தையும் சமாளிக்க இயலாது. காரணம் – பிரம்மோஸ் தரையிலோ அல்லது கடலிற்கு மேலோ பறக்காமல், கீழே தாழ்வாகவே பறக்கிறது. அதனால்  ரேடார் வரும்போதே தெரியாது. தெரிந்த சமயத்துலயே இலக்கை தாக்கி விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவால்  சிறிய எண்ணிக்கையிலேயே பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டாலும், அது போர் முடிவையே தீர்மானிக்கக்கூடிய தாக்கத்தை உருவாக்கும். பாகிஸ்தானிடம் இதற்கு ஒப்பான ஆயுதம் இல்லை என்பது ராணுவ நிபுணர்கள் கூறும் உறுதியான உண்மையாக உள்ளது .

Latest news