Friday, May 16, 2025

‘பாகிஸ்தான் நாயைப் போல ஓடிப் போனது’ -மைக்கேல் ரூபின்!! பாகிஸ்தானுக்கு இந்த அசிங்கம் தேவையா?

பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் என ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களையும் முயற்சித்தது.இதனைத் தொடர்ந்து இந்தியா ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி, பாகிஸ்தான் விமானத் தளங்களில் உள்ள ரேடார் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் விமானநிலையங்களை சேதப்படுத்தியது. மே 10 அன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டில் தற்போது மூத்த உறுப்பினராக இருக்கும் மைக்கேல் ரூபின் ANI க்கு பேட்டி ஒன்றை கொடுத்தார்,அதில் அவர் பேசியது;
பாகிஸ்தான் ராணுவம் “மிகவும் மோசமாக தோற்றது” என்ற யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார். ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்..

“பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் சீருடை அணிந்த பாகிஸ்தான் அதிகாரிகள் கலந்து கொண்டது, பயங்கரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ உறுப்பினருக்கும் அல்லது பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைக் சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு ” பின்னர் பாகிஸ்தான் தொடர்ந்து பதிலடி கொடுக்க முயன்றபோது, ​​இந்தியா அவர்களின் விமானநிலையங்களை முடக்க முடிந்தது. போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் தனது கால்களுக்கு இடையில் வாலை வைத்துக்கொண்டு பயந்து நாயைப் போல ஓடியது. உண்மை என்னவென்றால், பாகிஸ்தான் தோற்றது மட்டுமல்லாமல், மிகவும் மோசமாக தோற்றனர் என்ற யதார்த்தத்தில் இருந்து அவர்களால் தப்ப முடியாது.
மேலும் பாகிஸ்தான் சமூகத்திற்கு ஒரு புற்றுநோய் போன்றது. ஒரு ராணுவமாக, அது திறமையற்றது. எனவே அசிம் முனீர் தனது வேலையைத் தக்க வைத்துக்கொள்வாரா என்பது கேள்விக்குறி” என்று கூறியிருப்பது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது

Latest news