Wednesday, August 20, 2025
HTML tutorial

பாகிஸ்தானுக்கு இனி முட்டுக்கட்டு!  இந்தியா எடுத்த வச்ச அடுத்த அடி..!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம் இப்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது!

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.அவர்கள் எல்லாம் சுற்றுலா வந்த அப்பாவி மக்கள்! இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என இந்தியா சொல்கிறது. ஆனால் பாகிஸ்தான் வழக்கம் போல மறுக்கிறது.

இதனால்  இந்தியா நேரடியாக ஐஎம்எஃப்-ஐ அணுகி, பாகிஸ்தானுக்கு இனி கடன் கொடுக்கக்கூடாது என கேட்டுக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அந்த நாடு பயங்கரவாதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கிறதா என்பதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன.

பாகிஸ்தான் ஏற்கனவே 7 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஐஎம்எஃப் உடன் சேர்ந்திருக்கிறது. அதில் 1.7 பில்லியன் மார்ச் மாதத்திலேயே வாங்கியிருக்கிறது. மீதமுள்ள 5.3 பில்லியன், அதனுடைய பொருளாதார நிலைக்கு ரொம்ப முக்கியமானது.

இந்த நிலையில் இந்தியா என்ன சொல்கிறது என்றால்  – பயங்கரவாதத்தை ஆதரிக்கிற நாட்டுக்கு கடன் கொடுக்கக்கூடாது என்று ஐஎம்எஃப் இடம் கோரிக்கை வைத்திருக்கிறது …

மேலும் ஐஎம்எஃப்பில் இந்தியாவுக்கு நல்ல மதிப்பும், பங்களிப்பும் இருக்கிறது. அதனால், இந்தியாவின் இந்த கோரிக்கை கண்டிப்பாக கவனிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், ஒரு பக்கம் சீனா பாகிஸ்தானுக்கு பெரிய ஆதரவாளி. கடந்த சில வருடங்களாக சீனா பாகிஸ்தானில் பல திட்டங்களுக்கு முதலீடு செய்துருக்கிறது. அதனால், ஐஎம்எஃப் கடன் கிடைக்கவில்லை என்றாலும் , சீனாவின் உதவியால் பாகிஸ்தான் மீண்டு வர வாய்ப்பு இருக்கு.

இப்போது பாகிஸ்தான் தனது வான்வழியை மூடிருக்கிறது… இந்தியா ராணுவ ஒத்திகைகளை அதிகரித்திருக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்படுமா இல்லையா என்பதையே உலக நாடுகள் கவனித்து வருகின்றது…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News