இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.
வங்கிகள், தொழில்துறை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கள் பங்குகளை திரும்ப பெற்றதால் கராச்சி பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு காணப்பட்டது.