Tuesday, July 29, 2025

“பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர ப.சிதம்பரம் முயற்சிக்கிறார்” – அமித்ஷா குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது,

காஷ்மீரில் நேற்று பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட ஆபரேஷன் மகாதேவ் தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இந்த 3 பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் ஆவர்.

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிடக்கூடாது என்று பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அடையாளம் கண்ட பாதுகாப்புப்படையினர் அவர்களை சுட்டுக்கொன்றனர்.

நேற்று நடந்த ஆபரேஷன் மகாதேவின்போது சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகள் சுலைமான், ஆப்கன், ஜிப்ரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பயங்கரவாதி சுலைமான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டுள்ளான். சுலைமான் பஹல்காம் தாக்குதல், காஷ்மீரின் ஜகாங்கிர் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவன் ஆவார்.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் முயற்சிக்கிறார். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? என்பதற்கு ஆதாரத்தை ப.சிதம்பரத்தை கேட்கிறார். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சியடைவார்கள் என நினைத்தேன். ஆனால், எதிர்க்கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News