கர்நாடக மாநிலத்தில் ஹம்பம்மா (52) என்ற பெண் பெங்களூரு அவென்யூ சாலையில் உள்ள ஒரு புடவை கடைக்கு சென்றுள்ளார். அங்கு சுமார் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள புடவைகளை திருடியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த கடைக்காரர் அந்த பெண்ணை சாலையில் இழுத்துச் சென்று, அவரை தாக்கியுள்ளார். அருகில் நின்ற கடைக்காரர்களும் உள்ளூர்வாசிகளும் இந்த முழு சம்பவத்தையும் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடித்தனர்.
திருட்டுக்காக அந்தப் பெண் மீதும், தாக்குதலுக்காக கடைக்காரர் மற்றும் அவரது உதவியாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.