இம்ரான் கானை விடுவிக்ககோரி பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் காரணமாக 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 2023 முதல் சிறையில் உள்ளார். இந்நிலையில், இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் அவரது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டங்களின் போது போலீசார் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இம்ரான் கான் இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.