Thursday, December 25, 2025

18.4 கோடி பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு., உடனே இதை பண்ணுங்க

ஆப்பிள், கூகுள், முகநூல், மைக்ரோசாஃப்ட், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற முக்கிய தளங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் 18.4 கோடிக்கு அதிகமான கணக்குகளின் பயனர் பெயர்கள் (User name), கடவுச்சொற்கள் (Password) உள்ளிட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் முதல் வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்கள் வரை கசிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க உடனடியாக அனைவரும் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

ஃபௌலர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், ’இன்ஃபோஸ்டீலிங் மால்வேர்’ வகை மென்பொருளை பயன்படுத்தி பயனர்களின் பெயர்கள், கடவுச்சொற்கள், கிரெடிட் – டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை சமூக ஊடகங்கள், வங்கிக் கணக்குகள் என அனைத்துக்கும் வைத்திருப்பவர்கள் உடனடியாக தனித்தனி கடவுச்சொல்லை மாற்ற வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

Latest News