Tuesday, March 11, 2025

இந்த தேதியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ‘ஹோலி’ பண்டிகையும் ஒன்று. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வரும் 14ம் தேதி நாடு முழுவதும் ‘ஹோலி’ பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் ஹோலி பண்டிகை அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு விடுமுறை தினமான 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று “ஹோலி பண்டிகையை” முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. னவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news