Friday, May 9, 2025

ஆஸ்கர் விருது : குழுவில் உள்ளவர்களுக்கு புதிய விதிமுறை

ஆஸ்கர் விருதின் தேர்வு குழுவில் உள்ளவர்கள், பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும் என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

98-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு குழுவில் உள்ளவர்கள், பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news