Monday, February 10, 2025

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகளை ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டார். 2016ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news