கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உராங்குட்டான்
பாசமுடன் முத்தமிட்டது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில்
டிரெண்டாகி வருகிறது.
உராங்குட்டானின் இந்தச் செயலால் அந்தக் கர்ப்பிணிப் பெண்
மனங்குளிர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளது அனைவரையும்
நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் குளுசெஸ்டர் நகரில் வசித்து வருபவர்
நவோமி டெவிஸ். நர்சிங் உதவியாளரான 34 வயதான இந்தப்
பெண் அங்குள்ள வனவிலங்கு பூங்காவுக்கு அடிக்கடி சென்றுவருவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்த வகையில் தனது வருங்கால கணவருடன் அந்தப்
பூங்காவுக்கு சென்றிருந்தார். அங்கு உராங்குட்டான் அடைத்து
வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று கண்ணாடிக் கூண்டு
அருகே நின்றுகொண்டார்.
அப்போது அங்கு வந்த குட்டி உராங்குட்டான் நான்கு மாதக்
கர்ப்பிணியான நவோமியின் வயிற்றில் மிகுந்த பாசத்துடன்
முத்தமிட்டது- இதனால் நெகிழ்ந்து போனார் நவோமி.
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வலைத்தளவாசிகளையும் கவர்ந்துள்ள இந்த வீடியோ மிகவும்
பழமையானது என்று கூறப்படுகிறது.