வானிலை மைய இயக்குநர் அமுதா அளித்த பேட்டியில் கூறியதாவது :
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 29ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் எந்த அளவுக்கு மழை இருக்கும் என நவம்பர் 30-ல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
