கிருஷ்ணகிரி, காட்டி நாயனப்பள்ளியில் உள்ள அன்னை இந்திராகாந்தியின் திருஉருவச்சிலை அருகில் காங்கிரஸ் நாடாளுன்ற உறுப்பினர் கோபிநாத், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் SIR வேண்டாம் என முழக்கம் எழுப்பி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடைபெற்றது. மேலும் பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் ஒரு அங்கம்தான் என காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னீர் செல்வம், கண்ணன், யாதவராஜ், அன்பரசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்கள்.
