கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தமிழ்செல்வம் இன்று எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அலுவலக சாவி தொலைந்தால் வெளியே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரம் ஆகியும் சாவி கிடைக்காத காரணத்தினால் அதிமுகவினர் பூட்டை உடைத்து எம்.எல்.ஏ வை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தை மாதத்தில் பொதுவாக நன்மை பிறக்கும் என்ற ஒரு ஐதீகத்தில் தை மாதத்தில் எல்.எல்.ஏ அலுவலக பூட்டு உடைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.