AI தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் நிலையில் அதனைப் பயன்படுத்த ஏஐ நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் சாட்ஜிபிடி வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, இலவசமாக பயன்படுத்தும் ‘சாட்ஜிபிடி ப்ரீ’, கட்டணங்களுடன் பயன்படுத்தும் ‘சாட்ஜிபிடி கோ’ மற்றும் ‘சாட்ஜிபிடி பிளஸ்’ என பல வகைகளில் அறிமுகப்படுத்தியது.
இதில் ‘சாட்ஜிபிடி கோ’ சாட்பாட்டை(chatbot) பயன்படுத்த மாதம் ரூ. 399 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியர்களுக்கு இதனை ஓராண்டுக்கு இலவசமாக வழங்க ஓப்பன்எஐ நிறுவனம் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
