செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, தனது ஐந்தாவது தலைமுறை ஏஐ மாடலான GPT-5-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இது, தற்போது பயன்பாட்டில் உள்ள ChatGPT போன்ற சேவைகளுக்குப் பின்னணியில் செயல்படும் முக்கிய நுண்ணறிவு மாடல் ஆகும்.
GPT-5 மாடல் அம்சங்கள் என்னென்ன?
GPT-5 உரை, படம், குரல் வீடியோ போன்ற பலவகை உள்ளீடுகளை விரைவாகவும் துல்லியமாகவும் கையாளும் திறன் பெற்றது. API வெர்சனில் GPT-5 என்பது அதிக செயல்திறனை வழங்கும் மாடல் ஆகும்.
GPT-5 மாடல் மூன்று அளவுகளில் வெளிவந்துள்ளது. gpt-5, gpt-5 mini, gpt-5 nano ஆகியவை தான். இது டெவலப்பர்களுக்கு செயல்திறன், செலவு மற்றும் தாமதம் ஆகியவற்றில் தங்களுக்கேற்ற மாற்று தேர்வுகளை செய்ய அதிகத் தகுதிகளை வழங்கும்.
GPT-5 ஒரே நேரத்தில் 50,000 வார்த்தைகள் (tokens) வரை கையாள முடியும், இது GPT-4-இன் திறனைவிட இரட்டிப்பு அளவு அதிகம். GPT-4 ஐ விட GPT-5 கணிசமான முன்னேற்றம் பெற்றுள்ளது.