Wednesday, January 28, 2026

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா” நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நமது நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிடும் என காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related News

Latest News