கோவை இருகூர் அருகே, ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றரை வயது குழந்தை சடலமாக கிடந்த வழக்கில், நரபலியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருகூர் ராவுத்தூர் தரைப்பாலம் அருகேயுள்ள தண்டவாளத்தில், ஒன்றரை வயது ஆண் குழந்தை சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையின் உடல் அருகே மஞ்சள், குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் ரத்தம் ஆகியவை கிடந்தது பரபரப்பை மேலும் கூட்டியது.
மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடம் விரைந்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா அல்ல வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
