ஓணம் பண்டிகை : தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

ஒரு நாட்டின் செழிப்பு அனைவருடனும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்போது தான் அர்த்தமுள்ளதாகிறது என்பதை ஓணம் பண்டிகை நினைவூட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அன்பான மலையாள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். ஓணம் என்பது திராவிட பாரம்பரியத்தை நினைவூட்டும் ஒரு பண்டிகை என்றும் நமது வரலாறும், போராட்டங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓணம் என்பது கண்ணியம் அனைவருக்கும் சமம் என்று நம்பி அனைவரும் சமமாக வாழ்ந்த ஒரு சகாப்தத்தின் மறுமலர்ச்சி என்றும் இந்த ஓணம், நமது பிணைப்பை வலுப்படுத்தட்டும், ஒவ்வொரு குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும், சமத்துவமான மற்றும் கண்ணியமான சமுதாயத்தை ஒன்றாக கட்டியெழுப்ப ஊக்குவிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News