TWO WHEELER நம்பர் பிளேட்டில்
வேடிக்கை காட்டிய 3 பேர்

286
Advertisement

டூ வீலர் நம்பர் பிளேட்டில் வாகனப் பதிவெண்ணுக்குப் பதிலாக
வேடிக்கையான வரிகளை எழுதி வைத்ததற்காக 3 இளைஞர்கள்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், அவரியா பகுதியில் நிகழ்ந்துள்ள
இந்த சம்பவத்தால், இந்த வேடிக்கையான செயலும் அதிரடியான
காவல்துறை அதிகாரிகளும் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளனர்.

சில மாதங்களுக்குமுன்பு அப்பகுதியில் போக்குவரத்துக் காவலர்கள்
வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த
ஒரு டூ வீலரில் 3 இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.

நம்பர் பிளேட்டில் ‘போல் தேனா பால் சாஹேப் ஆயே தி’ என்று
இந்திப் பாடல் வரி எழுதப்பட்டிருந்தது. இதற்கு ‘பால் சாஹேப்
வந்திருப்பதாகச் சொல்லுங்கள்’ என்று அர்த்தம்.

அந்த வாகனத்தை போக்குவரத்துக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இரு சக்கர வாகனத்தில் டூ வீலரில் வாகனப் பதிவெண் இன்றியும்,
3 பேர் பயணித்ததற்காகவும், ஹெல்மட் அணியாமல் வந்ததற்காகவும்
மூவரையும் கைதுசெய்தனர்.

இந்த சம்பவத்தை உத்தரப்பிரதேசக் காவல்துறைத் தங்களது
அதிகாரப்பூர்வ ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சாலை விதிகளைப் பின்பற்றாமல் டூ வீலர் ஓட்டிவந்த மூன்று
இளைஞர்களின் வருகையை ட்டுவிட்டர் மூலம் சொல்லிவிட்டது
போலீஸ்.