CNG நிலையத்தில் ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டும் பெண்

உத்தரப் பிரதேசம், ஹர்தோயில் உள்ள ஒரு CNG நிலையத்தில் பெண் ஒருவர் காரில் CNG நிரப்புவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் பயணிகளின் பாதுகாப்புக்காக, காரில் உள்ளவர்களை கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது காரில் இருந்த மற்றொரு பெண் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஊழியரை சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது அங்கிருந்த CCTV கேமராவில் பதிவானது.

இதையடுத்து அந்த ஊழியர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பெயரில் விசாரித்த போது உரிமம் இல்லாத துப்பாக்கி என தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News