பிரபல ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை நிறுவனமான ஓலா தற்போது உணவு டெலிவரியிலும் கால் பதித்துள்ளது.
ஓலா நிறுவனம் ஓஎன்டிசி எனப்படும் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் வழியாக பெங்களூருவின் குறிப்பிட்ட பகுதிகளில் உணவு டெலிவரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் இந்த சேவை தொடங்கும் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது ஒரு சோதனை ஓட்டம் தான் என்றும் இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் சேவை அறிமுகம் செய்யப்படும். உணவு டெலிவரி மட்டுமில்லாமல் மளிகை சாமான்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றையும் எளிதாக ஆர்டர் செய்து டெலிவரி பெற்று கொள்ள முடியும் என ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.