கழுதை இழுத்து சென்ற  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

253
Advertisement

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பல நிறுவனங்கள் மும்மரம் காட்டினாலும்,  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் , சார்ஜ் அதிக நேரம் நிற்பதில்லை , நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது போன்ற நெகட்டிவிடியும் உள்ளது.

இந்நிலையில்  , ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு வாரம் மட்டுமே வேலைசெய்ததாக ஸ்கூட்டரை கழுத்தை உடன் உரிமையாளர் இழுத்த சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் கீட் என்ற நபர், தன் ஓலா ஸ்கூட்டர் வாங்கி  ஆறு நாட்கள் மட்டுமே வேலை செய்தது.அதையடுத்து ஸ்கூட்டர் பற்றி புகார் அளித்ததற்கு ஓலா தரப்பில் யாரும் வந்து அதனை சரி செய்து கொடுக்கவில்லை என இவர் குற்றம்சாட்டி இருக்கிறார். கஸ்டமர் சேவை அதிகாரிக்கு பல முறை தொடர்பு கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால்  விரக்திஅடைந்த  அவர் ,தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்து சென்றுள்ளார். மேலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்று கூறும் பதாகைகளையும் வைத்திருந்தார். ஸ்கூட்டரை கழுதை இழுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்றும் ஓலா இருசக்கர வாகனங்களை வாங்க வேண்டாம் என கூறும் பதாகைகளை அவர் தனது ஸ்கூட்டர் மற்றும் கழுதையின் மேல் வைத்துக் கொண்டு ஊர்வலம் வந்தார்.

சமீப நாட்களாகவே  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ புடிப்பது எரிவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.இதன் காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அனைத்தும் திரும்ப பெறுவதாக  ஓலா  நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.