ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பவிஷ் அகர்வால் தலைமையிலான இந்த நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 50% இழப்புகளைக் கண்டுள்ளது. இதையடுத்து இழப்புகளைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களில் இரண்டாவது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.