ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 30 பேர் காயம்

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. 

இந்நிலையில், 3வது நாளான இன்று (ஜூன் 29) அதிகாலை திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Related News

Latest News