தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறக் கூடாது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கட்சிக்கு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.