உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண்ணிற்கு பிரசவத்திற்கான தேவையான வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வலி தீவிரமாகிய நிலையில், அவ்விடத்திலேயே தரையில் அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு அங்கு பணியாற்றிய சில நர்சுகள், “சுகமாக இருக்கிறதா? இன்னும் பல குழந்தைகள் பிறக்க வேண்டுமா?” என கேலி செய்து நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக தலைமை மருத்துவ அதிகாரி ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட இரண்டு நர்சுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.