Wednesday, February 5, 2025

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர், என் நிலத்தில் பெரியார் யார்? – சீமான் பேச்சால் மீண்டும் பரபரப்பு

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை 10 மணி அளவில் அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 220 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே குவிந்து வருவதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் : பெரியாரா, பிரபாகரனா என்று ஆகிவிட்டது..மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான். பெரியாரை விமர்சித்ததற்கு திராவிடர் கழகமே அமைதியாக இருக்கிறது. மற்ற அமைப்புகள் தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி, தமிழ் சனியன், தமிழில் என்ன இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.என் நிலத்தில் பெரியார் யார்.. நீங்கள் கன்னடன். கர்நாடகா நாட்டில் பிறந்தவர். அவர் என் நிலத்தில் அமர்ந்து தமிழை கொச்சைப்படுத்துவதா. பெரியார் தொடர்பாக இன்னும் முழுமையாக பேசவே தொடங்கவில்லை. அதற்குள் அலறுகிறார்கள். பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், அங்கு பதிலளிப்பேன்” என்று சீமான் கூறினார்.

Latest news