கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தவெக தலைவர் விஜய் இஃப்தார் விருந்து நடத்தியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் : ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நான் கிடையாது. இதுபோன்று செய்வது விஜய்யிக்கு பிடித்து இருக்கிறது, அதனால் அவர் செய்கிறார். அவர் சென்று வந்ததால் எந்த பாதிப்பும் எங்களுக்கு இல்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் இதனால் என்ன பிரச்சனையும் இல்லையே. அதனால் அதைப் பற்றி பேச தேவையில்லை” என்றார்.