சென்னை மாநகர் முழுவதும் சென்னை மாநகர பேருந்துகள் பல வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், ஏசி பேருந்துகள் என பல வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்துகளில் மாதாந்திர பயணசீட்டு வசதிகள் உள்ளது. மாதம் ரூ.1000 பாஸ் எடுத்தால் அரசு ஏசி பேருந்தை தவிர அனைத்து பேருந்துகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ளலாம்.
இந்த பஸ் பாஸ் வசதியை தற்போது ஏசி பேருந்துகளுக்கும் நீட்டிக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. மாதம் ரூ.2000 பஸ் பாஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரூ.2000 பாஸ் எடுத்தால் மாதம்தோறும் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்து கொள்ள முடியும். இந்த நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.