Tuesday, September 2, 2025

இனி EMI முறையில் ஈசியா தங்கம் வாங்கலாம்..! வரப்போகுது புது திட்டம்

இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதை சமீபத்தில் அனைவரும் கவனித்து வருகிறார்கள். விலை உயர்வு காரணமாக சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் வாங்குவது கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள தங்க வியாபாரிகள் சங்கம், மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்து இருக்கிறது. அதாவது, தங்க நகைகள் வாங்கும்போது கூட EMI வசதியை வழங்க வேண்டும் என்பது அந்த கோரிக்கை.

இதுவரை வங்கிகள் வீடு, வாகனம் மற்றும் வணிக கடன்களுக்கு மட்டுமே EMI வசதியை வழங்கி வருவது பழக்கம். ஆனால் எதிர்காலத்தில் தங்க நகைகளுக்கு EMI வசதி வந்துவிட்டால் நடுத்தர வருமான மக்களுக்கு தங்கம் வாங்குவது எளிமையாக இருக்கும் என்று வியாபாரிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டால் மத்திய அரசுக்கும் நன்மை வர உள்ளது. தங்க விற்பனை அதிகரித்தால், அதனால் பெறப்படும் GST வருமானம் அதிகரிக்கிறது. அதே சமயம், EMI முறையில் கடன் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் CIBIL மதிப்பெண் அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்பதால், வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News